`போதை ஊசி... இளைஞர் மரண விவகாரம்..!'- சிறுவர்கள் கையில் போதை மாத்திரைகள்-போலீசை அதிர வைத்த பின்னணி
சென்னையில் 19 வயது இளைஞரான கல்லூரி மாணவர் ஒருவர், போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், போதை மாத்திரைகளுடன் வலம் வந்ததாக கூறி 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட புளியந்தோப்பை சேர்ந்த மணிகண்டன், ஆகாஷ், சஞ்சய் ஆகியோரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவன் 9 வயதிலேயிருந்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், சிறுவன் மீது பல வழக்குகளும் இருப்பது தெரியவர, ஐவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
Next Story