`கூல் லிப்' போதை பொருள் வழக்கு - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பரபரப்பு கேள்வி | Cool Lip

x
  • "கூல் லிப்" உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என ஏன் அறிவிக்கக்கூடாது? என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
  • மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமின் மற்றும் முன் ஜாமின் கோரும் வழக்குகள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு வருகின்றன.
  • சமீபத்தில் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களை அழைத்த நீதிபதி, "கூல் லிப்" உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக
  • மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார்.
  • அது தொடர்பாக ஹரியானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.
  • அப்போது, புகையிலை போதைப்பொருட்களின் பாக்கெட்டுகளில் மண்டை ஓட்டு படம் அச்சிடப்படுவது தொடர்பாக குட்கா நிறுவனங்கள் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
  • தொடர்ந்து போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க வேறு எம்மாதிரியான எச்சரிக்கைகளை வழங்கலாம்? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

Next Story

மேலும் செய்திகள்