DRT வழக்கில் மத்திய நிதித்துறை செயலாளர் சேர்ப்பு | Thanthitv

x

கனரா வங்கியில் வாங்கிய 1.7 கோடி ரூபாய் கடனை முறையாக செலுத்தாக கூறி, தனது சொத்துகளை ஏலம் விட தடை விதிக்க கோரி தனபாலன் என்பவர்

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இதே போன்ற பல்வேறு வழக்குகளை, கடன் மீட்பு தீர்ப்பாயத்திற்கு சென்று நிவாரணம் பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அறிவுறுத்தியது. ஆனால் மதுரையில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் அலுவலர் இல்லாததால், மனுதாரர்களை கேரளாவின் எர்ணாகுளம் கடன் மீட்பு தீர்ப்பாயம் சென்று

நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என கூறப்படுவதாக தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள கடன் தீர்பாயங்களை அழிப்பது போல மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளதாக கூறிய நீதிபதிகள், இந்த வழக்குகளில்

மத்திய நிதித்துறை செயலரை தாமாக முன்வந்து சேர்ப்பதாக உத்தரவிட்டனர். தமிழகத்தில் உள்ள கடன் தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கை

தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்