"உங்க வீட்டு பையனா இருந்தா இப்படி பண்ணுவீங்களா.." - ஓட்டுநரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பெண்

x

உங்க வீட்டு பையனா இருந்தா இப்படி பண்ணுவீங்களா.." - ஓட்டுநரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பெண்

மதுரையில் மாணவர்களுக்கு ஆதரவாக பெண் பயணி ஒருவர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. கடந்த வாரம் ஒத்தக்கடை பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக மாணவர்கள் காத்திருந்துள்ளனர். ஆனால், அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிற்காமல் சென்ற நிலையில், ஒரு சில மாணவர்கள் கீழே விழும் அளவிற்கு வேகமாக ஓடி வந்து பேருந்தில் ஏறினர். இதனை, கவனித்த பெண் பயணி ஒருவர், மாணவர்களை பேருந்தில் ஏற்ற மறுத்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்