"200 பவுன்.. ரூ.25 லட்சம் கார்.." - பாமக MLA மீது பாய்ந்த வரதட்சணை கொடுமை வழக்கு

x

சேலத்தில் மருகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக பாமக எம்எல்ஏ சதாசிவம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள பாமகவை சேர்ந்த சதாசிவத்தின் மகனுக்கும், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த மனோலியாவுக்கும் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன் மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்த நிலையில், மனோலியா சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கணவர் சங்கர், தனது மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, கணவனின் சகோதரி கலைவாணி ஆகியோர் அடித்து கொடுமை படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்த 200 பவுன் நகை, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் மற்றும் ரொக்கப்பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு பிரச்சினை செய்துவருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், அவரது மகன் சங்கர் உள்ளிட்ட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்