இரட்டை வாக்குரிமை பிரச்சனை..தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ராதாபுரம் அதிமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகேசன் என்பவர் தொகுதிக்கு உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு இரட்டை வாக்குரிமை உள்ளதாகவும், அதை உடனடியாக விசாரணை செய்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என, கடந்த மாதம் 27ம் தேதி மனு அளித்தது இருந்தார். அந்த மனு மீது விசாரணை செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், ராதாபுரம் தொகுதியில் உள்ள இரட்டை வாக்குரிமை உள்ள ஆயிரத்து 686 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதே போன்று ராதாபுரம் தொகுதியில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறந்த வாக்காளர்களை நீக்குவதற்காக, அவர்கள் பெயர்களை அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளனர்.
Next Story