``தலைவர் வர்றாரு நிதி வேணும்'' - டொனேஷன் கேட்டு அத்துமீறல்? - வைரல் வீடியோ.. மேலிடத்தில் புகார்

x

கனிம வளம் எடுக்கும் குவாரியில், பெண் ஊழியர் ஒருவரை மிரட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பணம் கேட்கும் செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஏராளமான கனிம வளம் எடுக்கும் குவாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த குவாரி உரிமையாளர்களை மிரட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், விசிக கட்சி கொடியுடன் கூடிய காரில் மூவர் கனிம வளம் எடுக்கும் குவாரியில், பெண் ஊழியரை மிரட்டி பணம் கேட்கும் செல்போன் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனிம வளம் எடுக்கும் குவாரியின் பெண் ஊழியரை மிரட்டி பணம் கேட்கும் வீடியோவும், குவாரி உரிமையாளரை வற்புறுத்தி நிதி கேட்கும் ஆடியோவும், விசிக பெயரில்... வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் அதே சமயத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிடத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்