விறுவிறுப்பான தேர்தல் பயணத்தில் அணுகுண்டை போட்ட டிரம்ப்.. கமலா பக்கம் திரும்பிய கவனம்

x

அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் வரி உயர்வு அளித்துள்ளதாக, குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

லாஸ்வேகாஸில் பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிகப்படியான வரி விதிப்புக்கு உள்ளான லாஸ்வேகாஸ் விருந்தோம்பல் தொழில் இனி ஒருபோதும் மீள்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதாக தெரிவித்தார். கமலா ஹாரிஸ் அவரது பிரசாரத்தில் எனது பெயரை 20க்கும் மேற்பட்ட முறை குறிப்பிட்ட நிலையில், எல்லை பாதுகாப்பு பற்றியோ, மோசமான பொருளாதார சூழல் பற்றியோ, பணவீக்கம் பற்றியோ, பெருகிவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது குறித்தோ வாய் திறக்கவில்லை என டிரம்ப் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்