அதிபர் தேர்தலில் இந்திய ரத்தம் கமலா ஹாரிஸ் இறங்கினால்...முகம் சிவக்க டிரம்ப் சொன்ன வார்த்தை

x

அதிபர் பதவிக்கு போட்டியிட ஜோ பைடன் தகுதியற்றவர், என முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக, பைடன் அறிவித்த நிலையில், டிரம்ப் இந்த கருத்தை முன் வைத்துள்ளார். பொய், போலி மூலம் மட்டுமே அதிபர் பதவியை அடைந்தார் என பைடனை விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்காவில் அவர் செய்த சேதத்தை நாங்கள் மிக விரைவாக சரிசெய்வோம் என கூறியுள்ளார். மேலும், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டால், அவரை தோற்கடிப்பது மிகவும் எளிது என்றும் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்