வைரலாகும் கண்கூசும் அந்தரங்க வீடியோ.. தூக்கி அடிக்கப்படும் டாக்டர் சுப்பையா..?
சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருப்பவர் சுப்பையா சண்முகம். இவர் மருத்துவமனையின் பெண் செவிலியர்கள் உடை மாற்றும் அறைக்குள் புகுந்து, செவிலியர் ஒருவரிடம் அந்தரங்கமாக இருந்த வீடியோ லீக் ஆகி சர்ச்சையானது. இதுகுறித்து, மருத்துவமனையில் விசாகா கமிட்டி விசாரணை நடத்தி, விசாரணை அறிக்கையை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திடம் வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில், டாக்டர் சுப்பையா சண்முகத்தை பணியிட மாற்றம் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட மருத்துவக்கல்வி இயக்குனரகம், தானும் அதே பரிந்துரையை செய்துள்ளது.
Next Story