வேதனையில் துடிதுடித்த தாய்.. மகனிடம் பேரம் பேசிய அரசு டாக்டர் - அதிரவைக்கும் ஆடியோ
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அரசு மருத்துவமனைக்கு சென்ற கை உடைந்த மூதாட்டிக்கு, சிகிச்சை அளிக்காமல், தனியார் மருத்துவமனைக்கு வர சொன்ன, அரசு மருத்துவரின் ஆடியோ வெளியாகி உள்ளது. வந்தவாசியை சேர்ந்த 70 வயதான சபையா பீவி, கை உடைந்ததால்,
அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருத்துவரை அணுகிய போது அங்கு அருண் மகேஷ் என்ற எலும்பு முறிவு மருத்துவர் பணியில் இல்லை.
இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த மற்றொரு மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவரின் செல்போன் நம்பரை கொடுத்து பேச சொல்லி இருக்கிறார். அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது, அரசு மருத்துவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்த ஆடியோ வெளியாகி உள்ளது.
Next Story