"இதை பண்ணா Accident ஆகாது" கவரைபேட்டையை நினைவில் வைத்து கண்டுபிடித்த சிஸ்டம் | Madurai

x

"இதை பண்ணா Accident ஆகாது" கவரைபேட்டையை நினைவில் வைத்து கண்டுபிடித்த சிஸ்டம் | Madurai

#madurai #chennaitrain #tamilnadu #thanthitv

மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக சென்சார் மூலம் இயங்கும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். திருப்பரங்குன்றம் அடுத்துள்ள பாலாஜி நகரை சேர்ந்த ஜெயவிஷ்ணு என்பவர் மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பொறியியல் படித்து வருகிறார். இவர் சக மாணவர் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து ரயில் விபத்துகளை தடுக்கும் வகையில் பாய்ண்ட் மிஷின் ஸ்டேட்டஸ் சர்வீஸ் சிஸ்டம் என்னும் புதியசென்சார் கருவியை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மூன்று கிலோமீட்டர் முன்னதாகவே பழுதை அறிந்து விபத்தை தவிர்த்து விடலாம் என விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்