உறைய விட்ட மெரினா சம்பவம்.. வீரியமான வார்த்தைகளில் திமுக அரசை கடுமையாக தாக்கிய விசிக

x

தமிழக அரசின் கவனக்குறைவால், வான்படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல், வேதனை நிகழ்வாக மாறிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து வி.சி.க துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள பதிவில், மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை - ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஒழுங்குபடுத்தவில்லை - முறையான முதலுதவி சிகிச்சை மையங்களை ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிவதாகவும்,

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதை காண முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் -

அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர் -

தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடுக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ, அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும் என்றும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்