"வடை சுடுறதெல்லாம் உங்க வேலை.. Wait And See" - மேடையில் பதிலடி கொடுத்த CM

x

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக தி.மு.க. முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில்

நடைபெற்றது. விழாவில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் பரிசளிக்கப்பட்டது. விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில், தி.மு.க. அபார வெற்றி பெறும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்