சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டம் - யாருடைய திட்டம்? திமுக எம்.பி சரமாரியாக கேள்வி

x

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம், தற்போது மாநில அரசின் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதியை விடுவிக்கக்கோரி மாநில அரசிடமிருந்து கோரிக்கை ஏதேனும் வந்திருக்கிறதா? என்று திமுக எம்பி ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறதா? என்றும் கேட்டிருந்தார்.

இதற்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் தோக்கன் சாஹூ எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிலோ மீட்டர் நீள வழித்தடத்திற்கு, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை செயல் படுத்த தமிழக அரசு முன்மொழிந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், செலவினத்தை தமிழக அரசே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்