திமுக எம்பி கதிர் ஆனந்த் காரை வழிமறித்த பொதுமக்கள்
பேர்ணாம்பட்டு அருகே அடிப்படை வசதிகள் செய்துத்தரக்கோரி, வேலூர் எம்.பி கதிர் ஆனந்த்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திமுக நிர்வாகி இல்ல துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக கதிர் ஆனந்த் சென்றார். இதை அறிந்த அப்பகுதி மக்கள், வி.கோட்டா சாலையில், காரை மறித்து, கதிர் ஆனந்தை முற்றுகையிட்டனர். சாலை, குடிநீர், கழிவுநீரை அகற்றுவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத்தரக்கோரி பல முறை மனு அளித்தும், நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்றத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story