விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட திமுக நிர்வாகி.. கைதான பாஜக நிர்வாகி

x

விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட திமுக நிர்வாகி.. கைதான பாஜக நிர்வாகி

தர்ம‌புரி மாவட்டம் காரிமங்கலம் அருகே திமுக கிளை செயலாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த திமுக நிர்வாகி கோவிந்தசாமி என்பவரை, கடந்த 20ஆம் தேதி பாஜக நிர்வாகி ராஜசேகர் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பூச்சி மருந்து குடித்த கோவிந்தசாமி கடந்த 26ஆம் தேதி உயிரிழந்தார்.

இது தொடர்பாக கோவிந்தசாமியின் மகன் புவனேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், பாஜக நிர்வாகி ராஜசேகரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்