"திமுகவினர் இல்லீகலாகவும் நடப்பார்கள்" - திமுக முன்னாள் நிர்வாகி சர்ச்சை பேச்சு

x

திமுகவினர் லீகலாகவே நடக்க வேண்டுமென எதிர்ப்பார்க்காதீர்கள் என்றும், இல்லீகல் நடக்கும் என்றும் அமைச்சர் முன்னிலையிலேயே திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியில், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் நடைபெற்றது. இதில், திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்தில் பேசிய கிருஷ்ணகிரி கிழக்கு முன்னாள் மாவட்ட செங்குட்டுவன், கட்சியில் மூத்த நிர்வாகிகள் தன்னை மதிப்பதில்லை என்றும், இதுகுறித்து அமைச்சரிடமும் பேச முடியவில்லை என்றும் தெரிவித்தார். 40 ஆண்டுகளாக கிராமம் கிராமமாக சென்று தான் கட்சியை வளர்த்ததாகவும், ஆனால், தற்போது எந்த நிகழ்ச்சிக்கும் தன்னை அழைப்பதில்லை என்றும் அவர் கூறினார். அதிகாரிகளுக்கும், திமுகவினருக்கும் பெரிய இடைவெளி இருப்பதாக தெரிவித்த அவர், திமுகவினர் லீகலாகவே நடக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கக் கூடாது என்றும், இல்லீகல் நடக்கும் என்றும் தெரிவித்தார். எப்படி இருந்தாலும் கட்சிக்காரனை காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்ட அவர், இல்லீகல் ஓட்டு வேண்டாம் என்று கூறுவோமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் முன்னிலையிலேயே திமுக நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்