"ஜனவரி 24 முதல் பிப்ரவரி 5 வரை..." - திமுக தலைமை முக்கிய அறிவிப்பு
திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் அறிவுறுத்தல் படி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட பகுதி, ஒன்றிய, நகர பேரூர் செயலாளர், தொகுதி பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் மண்டல குழு தலைவர் உள்ளிட்ட மாவட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், ஜனவரி 24ந் தேதி மாலை கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஜன.27ந் தேதி முதல் காலை, மாலை என 4 தொகுதி நிர்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டமானது பிப்ரவரி 5ந் தேதி நிறைவடையும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது
Next Story