"தமிழகத்திற்கு தினமும் தண்ணீர்" - டி.கே.சிவக்குமார் தலைமையில் அவசர ஆலோசனை

x

தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தின் பரிந்துரைகள் தொடர்பாக, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். கர்நாடக அணைகளில் நீர்வரத்து குறைந்துள்ளதாகவும், அணையில் நீர் இருப்பு 41.65 டி எம் சி மட்டுமே உள்ளதாலும், ஜூலை 25-ம் தேதி வரை நீர் திறப்பு குறித்து முடிவெடுக்காமல் காத்திருக்க வேண்டும் என்றும் கர்நாடகா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் இன்று பிற்பகல் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்வர் சித்தராமய்யாவும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்