தீபாவளி முடிந்த அன்று இரவே சென்னையில் இறங்கிய 19 ஆயிரம் பேர் - விடிந்ததும் அப்படியே தலைகீழான தலைநகர்
தீபாவளி முடிந்த அன்று இரவே சென்னையில் இறங்கிய 19 ஆயிரம் பேர் - விடிந்ததும் அப்படியே தலைகீழான தலைநகர்
தீபாவளி பண்டிகையை கோலாகலமாக சென்னைவாசிகள் கொண்டாடி தீர்த்த நிலையில், பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர் தூய்மை பணியாளர்கள். சவாலான இப்பணியை தூய்மை பணியாளர்கள் கையாள்வது எப்படி ? பார்க்கலாம் விரிவாக.
காதுகளை கிழித்த சரவெடி, வானை அலங்கரித்த ஸ்கை ஷாட், குட்டீஸ்கள் கொண்டாடிய மத்தாப்பு என ஒட்டுமொத்த சென்னையும் தீபாவளி பட்டாசுகளால் ஜொலித்தது.
தற்போது பண்டிகை முடிந்து கொண்டாட்ட களைப்பில் இருந்து மீண்டுள்ள நிலையில், சென்னையை அலங்கரித்த பட்டாசுகள் கழிவுகளாக சாலையெங்கும் கிடக்கின்றன.
இவற்றை அகற்ற இரவு பகலாக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் தூய்மை பணியாளர்கள்.
இதில் மாநகராட்சி மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 62 பேர் இந்த பணியில் ஈடுபட்ட நிலையில், டன் கணக்கான பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு 275 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்ட நிலையில், பட்டாசு கழிவுகள் அபாயகரமானது என்பதால் இதற்கென பிரத்யேகமாக பயிற்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி பயிற்சி பெற்று பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மை பணியாளர்கள், இந்நாட்களில் பணிச்சுமை அதிகம் என்று கூறுகின்றனர். இருப்பினும் சக தூய்மை பணியாளர்களுடன் பணி மேற்கொள்வதால், சுமையாக தெரியவில்லை என்றும் கூறுகின்றனர் தூய்மை பணியாளர்கள்.
இந்நிலையில், பணியில் ஈடுபடுபவர்களுக்கு gloves, shoes உள்ளிட்ட அடிப்படை உபகரணங்கள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில், அசம்பாவிதத்தை தவிர்க்க பட்டாசு கழிவுகளை ஈரமாக்கி கொடுத்தால் நல்லது எனக்கூறுகிறார் மேற்பார்வையாளர் ஸ்ரீமன்.
சென்னை நகரத்தையே ஆட்கொண்டுள்ள பட்டாசு கழிவுகளை நீக்க இரவு பகலாக உழைக்கும் தூய்மை பணியாளர்களின் சுமையை குறைக்க, பட்டாசு கழிவுகளை தனியாக பிரிப்பதோடு, அதனை ஈரப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும் என கோருகின்றனர்.