தீபாவளி சிறப்பு பேருந்துகள் - உங்க ஊருக்கு போக எங்கே பஸ் ஏறனும்.. தெரிஞ்சிகோங்க..!

x

தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் எங்கெங்கு இயக்கப்படும் என்ற தகவலையும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சைக்கு பேருந்துகள் இயக்கப்படும். திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டைக்கும் கிளாம்பாக்கத்தில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும். சேலம், கோவை, போளூர், வந்தவாசி, திருவண்ணாமலைக்கும் அங்கிருந்தே பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். மாதவரத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார். மாதவரத்திலிருந்து வழக்கமாக திருச்சி, சேலம் மற்றும் கும்பகோணம், திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பேருந்துகளும் அங்கிருந்து இயக்கப்படும் தெரிவித்தார்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 94450 14436 என்ற உதவி எண் உள்பட பிற எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம் எனவும் அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்