நெருங்கும் தீபாவளி - நாவூறும் பலகாரம் உற்பத்தி விறுவிறு | Diwali | Special Sweets

x

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், காரைக்கால் பகுதியில் பண்டைய கால பலகார உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பண்டைய கால பலகராங்களான பாசிப்பருப்பு உருண்டை, உப்பு சீடை, சீப்பு சீடை, அதிரசம் உள்ளிட்டவை வீடுகளில் மட்டும் தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போது கடைகளிலும் கிடைக்க தொடங்கியுள்ளது. சீனி உருண்டை, முருக்கு, சுற்று முருக்கு உள்ளிட்டவைகளுக்கான ஆர்டர் குவிந்துள்ளதால், பாலகாரம் செய்யும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக காரைக்காலை சேர்ந்த பலகார உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய வகை இயந்திரங்கள் மற்றும் பெண்களின் உழைப்பில் தயாராகும் இனிப்பு வகைகள் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்