``தீபாவளிக்கு தடை..'' தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா ..! மிரள வைக்கும் காரணம்
``தீபாவளிக்கு தடை..'' தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா ..! மிரள வைக்கும் காரணம்
பட்டாசு, பலகாரம், புதுத்துணி-க்கு ஸ்ட்ரிக்ட் நோ
``தீபாவளிக்கு தடை..'' ``பாட்டன், பூட்டன் எடுத்த முடிவு..''
தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா ..! மிரள வைக்கும் காரணம்
தீபாவளி என்றாலே, நமக்கு காதை பிளக்கும் பட்டாசு சத்தங்களும், தித்திக்கும் இனிப்புகளும், புத்தாடையும் தான் நினைவில் வரும்.. இப்படி எந்தவிதமான கொண்டாட்டங்களையும் காணாத கிராமம் குறித்து பார்க்கலாம்.. விரிவாக..
இப்படி எந்த மகிழ்ச்சியையும் அறியாத கிராமம்தான், எஸ்.மாம்பட்டி. சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புணரி அருகே உள்ளது இந்த கிராமம்.. சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு, ஊரே கூடி எடுத்த முடிவு தான் இது.
நாடெங்கும் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து இனிப்புகளோடு மனதில் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலையில், தீபாவளி என்றால் என்னவென்றே தெரியாது என்பது போல இந்த கிராமத்தினர் இருப்பது நமக்கு ஆச்சரியத்தை வரவைக்கிறது..
ஆனால், நாம் நினைப்பது போல இல்லை.. தீபாவளியை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக இங்குள்ள மக்களும் கொண்டாடி இருக்கிறார்களாம்..
ஏழை விவசாயக் குடும்பங்கள் ஏங்கி நிற்க, வசதி படைத்தவர்கள் மட்டுமே தடபுடலாக தீபாவளிக் கொண்டாடி இருக்கிறார்கள்.. இதனால், ஊர் மக்களிடையே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்வதற்காகவும், கொண்டாட்டங்களில் இருந்து விலகி நிற்கும் எளியவர்களின் மனம் புண்படக்கூடாது என்பதற்காகவும் தீபாவளியை இங்குள்ளவர்கள் கொண்டாடுவது இல்லை எனக் கூறப்படுகிறது..
இதற்காகவே, 65 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் எல்லாருமே.. ஒன்றுகூடி சமரசத்துடன் ஒரு தீர்மானமும் விதித்திருக்கிறார்கள்.. அதுதான்.. தீபாவளியை கொண்டாடப்போவது இல்லை என்ற முடிவாகும்..
தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தோ, புத்தாடைகள் உடுத்தியோ, பலகாரங்கள் தயார் செய்வதோ, பட்டாசு வெடிப்பதோ கிடையாது..
கடந்த 1954ஆம் ஆண்டு வரை ஏழை, எளிய விவசாயிகள் தங்களிடம் இருந்தவற்றை எல்லாம், விவசாயத்திற்காக செலவிட்டு அறுவடையை நோக்கி காத்திருந்த போது இங்கு தீபாவளி கொண்டாட்டம் போன்ற ஆடம்பரம் எதற்கு என கிராமத்தினர் யோசித்து எடுத்த முடிவுதான் இது.. இதே கட்டுப்பாடுகள் தான் சுற்றுவட்டார கிராமங்களிலும் தொடர்கிறது..
இப்படி தீபாவளியை தவிர்க்கும் இந்த விவசாய பெருமக்கள், அறுவடைக் காலத்தில் பொங்கல் பண்டிகையை மட்டும் தங்களது பாரம்பரியத்தை போற்றும் நாளாக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.. விவசாயத்திற்காக 65 ஆண்டுகளாக தீபாவளியை கொண்டாடாமல் உள்ள எஸ்.மாம்பட்டி கிராமம் நமக்கு வியப்பை தருகிறது..