தீபாவளி அன்று உயிரை விட்ட பரியேறும் பெருமாள் ``கருப்பி நாய்'

x

தீபாவளி அன்று உயிரை விட்ட பரியேறும் பெருமாள் ``கருப்பி நாய்' - படம் போலவே நிஜத்திலும் அதே மாதிரி வந்த மரணம்

இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கருப்பி நாய் விபத்தில் மரணமடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது... மாரி செல்வராஜின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் கிராமம். பரியேறும் பெருமாள் மூலம் திரை உலகில் அறிமுகமான அவர், படத்தில் பெரும்பாலான காட்சிகளை தனது சொந்த ஊரான புளியங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்திருப்பார்.

அந்த படத்தில் கருப்பி என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கும்... அந்த நாயைச் சுற்றித் தான் கதைக்களம் அமைந்திருக்கும்... அதிலும் படத்தில் நாய் கொல்லப்பட்டதும் வரும் பாடல் அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கும்...


Next Story

மேலும் செய்திகள்