நெருங்கும் தீபாவளி - பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளும்... அறிவுரைகளும்
தீபாவளி பண்டிகையை யொட்டி, உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகள் படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க சென்னை காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்கப்படவும் வெடிக்கப்படவும் வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட சீன வெடிபொருட்களை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை ஆறு மணி முதல் 7:00 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8:00 மணி வரையிலும் என ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு மணி நேரத்திற்குள் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் , பெட்ரோல் நிலையங்கள் அருகிலும், குடிசைப் பகுதிகளிலும், பட்டாசு கடை அருகிலும், கால்நடைகள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Card 5
பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிவது,
பட்டாசுகளை வெடிக்கும் பொழுது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கைப் பார்ப்பது,
எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது என்றும் ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது என்றும் பட்டாசு சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊரதுவத்தி கொளுத்தி வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டாசு கடை அருகே சிகரெட் பிடிப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பட்டாசுகளை வெடிப்பதற்கு நீளமான ஊதுவத்தி பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல்துறை அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108 தேசிய உதவி எண்.112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ளவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.