``தெரு தெருவா அலையுறோம் எங்க பிள்ளைங்களுக்கு ஸ்கூல்ல இடமில்லை'' - கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் தாய்
கோவை மாவட்டம் செட்டிவீதியை சேர்ந்த, வரலட்சுமியின் சிறப்பு குழந்தை மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் படித்து 300 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். அதை தொடர்ந்து பதினோராம் வகுப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளை அணுகிய போது, இடம் தர மறுத்துவிட்டனர். சில அரசு பள்ளி நிர்வாகம், தனியார் பள்ளியில் படிக்க வையுங்கள் என சிறப்பு குழந்தையை திருப்பி அனுப்பிவிட்டது. ஆனால் தனியார் பள்ளியில் படிக்க வைக்க இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவாகும் என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு தந்துள்ள நிலையில், தனது மகன் மேல் நிலை பள்ளியில் படிக்க இடமளித்து உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story