யூடியூப் வீடியோவை பார்த்து பணத்தை.. கொள்ளையடிக்க முயன்ற நபர்..தகவல் அறிந்து வந்த அதிகாரி

x

வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் உள்ள கட்டடத்தின் முதல் மாடியில், தனியார் நகைக் கடன் வங்கி இயங்கி வருகிறது. வழக்கம்போல், காலை வேளையில் ஊழியர்கள் பணிக்கு வந்தபோது, அங்கு இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காத்திருந்த அமர்நாத் என்பவர், பெண் அலுவலர் உட்பட 3 பேரை கட்டிப்போட்டு, அலுவலகத்தை திறக்குமாறு கூறியுள்ளார். அதற்கு ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்கவே, ஷட்டரின் பூட்டை அமர்நாத் உடைத்துள்ளார். அப்போது, அபாய மணி ஒலித்ததால், அமர்நாத் அங்கிருந்து தப்பியோடினார். அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், தப்பியோடிய நபரை விரட்டிப் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அமர்நாத்தின் தாய் வாங்கிய 20 லட்சம் ரூபாய் கடனை அடைப்பதற்காக, யூடியூப் சேனல் மூலமாக நகைக் கடைகளில் கொள்ளை அடிப்பது எப்படி? என தெரிந்து கொண்டு, அவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்