மருமகன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நொடி - மாமியாருக்கு நடந்த சோகம்
மருமகன் உயிரிழந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மாமியாரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியை சேர்ந்த அருண்குமார் துரித உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிலுக்குவார்பட்டியை சேர்ந்த நாகம்மாள் என்பவருடன் கடந்த பத்து மாதங்களுக்கு திருமணம் நடந்ததுள்ளது. நிறைமாத கர்ப்பிணியான நாகம்மாள் தனது தாய் வீட்டில் இருந்து வரும் நிலையில், அவரை பார்க்க இரு சக்கரவாகனத்தில் வந்த அருண்குமார் சாலையோரம் காயங்களுடன் மர்மான முறையில் உயிரிழந்தார். கர்ப்பிணியான தனது மகள் கணவனை இழந்தது தொடர்பாக கடும் மன உளைச்சலிலிருந்த தாய் சின்னபொன்ணு, இரவு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கணவனையும், தாயையும் இழந்த நாகம்மாள் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த சம்பவத்தினால் ஒட்டு மொத்த கிராமும் சோகத்தில் மூழ்கியது