கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் - திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் "என் மண் என் உரிமை" என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பழனி கோயில் கிரிவலப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் அகற்றப்பட்டது. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பழனி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே ஏராளமானோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தகட்டமாக ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றைஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக தெரிவித்துள்ளனர்...
Next Story