கனமழை, சூறைக்காற்று.. திடீரென இடிந்து விழுந்த வீடு - முதியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சி 8வது வார்டு பள்ளிவாசல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முகமது கனி. இவர் தனது மனைவி, மகள், பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்த போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முகமது கனி காயமடைந்தார்...
அவரது குடும்பத்தினர் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர்... மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. முகமது கனி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... தனது வீடு இடிந்து விழுந்த்தால் வருவாய்த் துறையினர் பார்வையிட்டு மீண்டும் வீட்டை சரி செய்து கொள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என முகமது கனி கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story