தாய்மாமன் சீர் பெருசா?.. அத்தை மகன் சீர் பெருசா?.. போட்டியில் ஊரையே வியக்க வைத்த சீர் வரிசை
திண்டுக்கல்லில் காது குத்து விழாவுக்கு தாய் மாமாவும், அத்தை மகனும் போட்டி போட்டி சீர் எடுத்து வந்த சம்பவம் பெரிதும் பேசப்பட்டது...
தாடிக்கொம்பைச் சேர்ந்த சபரி பாண்டி, சர்மிளா தம்பதியின் மகன் சித்தேஷ் காதணி விழா நடைபெற்றது. தாய்மாமன்கள் பண மாலை, டிரம்ஸ், சரவெடிகள், சாரட் வண்டி, மற்றும் டிராக்டரில் அரிசி மூட்டைகள், பழ வகைகள், வாழைத்தார்கள், சாக்லெட் வகைகள், புதிய ஆடைகள், ஆட்டுக்கிடா என 1008 சீர் வரிசைகள் வாண வேடிக்கையுடன் கொண்டுவரப்பட்டன... அதேபோல் அத்தை மகன்களும் தாய்மாமன் சீர் வரிசைக்கு சற்றும் சலைக்காமல் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதை ஊர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்...
Next Story