தாய், தந்தை முன்னே 15 வயது சிறுமியுடன் இளைஞர் செய்த செயல் - கோர்ட் கொடுத்த மறக்க முடியாத தண்டனை
15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவருடைய பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. 15வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததாக, நத்தம் பகுதியை சேர்ந்த எழுவன், உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை சின்னையா, தாய் விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், குற்றம்சாட்டப்பட்ட எழுவனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 56 ஆயிரம் அபராதமும், சின்னையா மற்றும் விஜயா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Next Story