உயிரை பணயம் வைத்து 12 மணி நேரம்.. அனலில் கிடக்கும் வினோத யாகம்

x

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியைச் சேர்ந்த அஷ்ட லட்சுமிநாத பெருமாள் சுவாமிகள், தங்கச்சியம்மாபட்டியில் அக்னி யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தினார். உலக நன்மை மற்றும் மழை வேண்டி, வெறும் தலையில் தீச்சட்டி சுமந்து சுமார் 12 மணி நேரம் அக்னி யாகம் நடத்தினார். இந்த யாகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்