சரக்கு பாட்டில்களுடன் நடு ரோட்டில் அமர்ந்த ஊர் மக்களால் பரபரப்பு

x

திண்டுக்கல் சிறுமலையில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்களை பிடித்த பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். பழையூர், புதூர், தாழக்கடை உள்ளிட்ட 5 இடங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவது குறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்த நபரிடமிருந்து 10 மதுபாட்டில்களை பிடித்த பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்