கொளுத்தும் வெயிலில் தம்பதி சாலை மறியல் - களேபரமான காவல் நிலையம்

x

வழிப்பறி செய்யப்பட்ட நகையை மீட்டு தர கோரி திண்டுக்கல் அம்பாத்துறை காவல் நிலையம் அருகில் கொளுத்தும் வெயிலில் சாலை மறியலில் ஈடுபட்ட தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது... பள்ளப்பட்டியைச் சேர்ந்த அழகர் - தங்க பாண்டியம்மாள் தம்பதி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பள்ளப்பட்டிக்கு சென்று கொண்டிருந்த போது அம்பாத்துரை காவல் நிலையம் அருகில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் தங்க பாண்டியம்மாள் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினைப் பறித்து சென்றதாக தெரிகிறது. 1 வருடமாக போலீஸ் விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக அவர்களுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது... இதனால் அத்தம்பதி மறியலில் ஈடுபட்ட நிலையில் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்