மருத்துவமனையில் கண்ணாடி துண்டால் கழுத்தறுத்து கொண்ட கேரள இளைஞர்

x

கொடைக்கானல் அரசு மருத்துவமனை கட்டத்தில் இருந்த கண்ணாடியை உடைத்து, கழுத்தை அறுத்து கொண்ட கேரள இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த மலப்புரத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள், கூக்கால் மலை கிராமத்தில் தங்கியுள்ளனர். அதில் இருவர் கஞ்சா வாங்கி புகைத்ததாகவும், தொடர்ந்து மூவரும் காரில் பயணிக்கும் போது கஞ்சா புகைத்த இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது திடீரென கார் கதவை திறந்து ஒரு இளைஞர் குதிக்க, அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்க சென்றுள்ளனர். அப்போது காயமடைந்த இளைஞர், தாய் சேய் நல பிரிவு கட்டடத்தில் இருந்த கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் வந்த இளைஞர் அவரிடம் இருந்த கண்ணாடி துண்டுகளை பிடுங்கிய நிலையில், காயமடைந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். தொடர்ந்து, சிகிச்சைக்காக இளைஞர் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் இருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்