திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்..! | Dindigul

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நீர்வரத்து குறையாத நிலையில், ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள், மக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

அங்குள்ள முளையூர் திருமணிமுத்தாற்றில் அதிக அளவில் நீர்வரத்து செல்கிறது. மழை விட்டு மூன்று நாட்கள் ஆகியும் ஆற்றில் நீர் வரத்து இன்னும் குறைந்த பாடில்லை. ஆற்றின் மறுக்கரையில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அவரது பிள்ளைகள் அனைவரும் முழங்கால் அளவு செல்லும் தண்ணீரில் ஆபத்தான முறையில் ஆற்றில் நடந்து செல்கின்றனர். போக்குவரத்து வசதி இல்லாததால், விளைந்த பொருட்களை தலையில் சுமந்தபடி ஆற்றை கடந்து செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்கள், விவசாயிகள் நலன் கருதி முளையூர் திருமணிமுத்தாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்