மக்கள் போராட்டத்திற்கு நடுவே சிக்கிய அமைச்சர் கார் - திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல்லில் நடைபெற்ற சாலை மறியலில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் கார் சிக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டி பகவதி அம்மன் கோயில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தரக்கோரி, திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் காரும், மறியலில் சிக்கியது. பின்னர் காரிலிருந்து இறங்கிய வந்த அமைச்சர் பெரியசாமி, உடனடியாக நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story