``500-க்கும் மேல்..'' கிராம மக்கள் அதிரடி கைது... ஒட்டன்சத்திரம் அருகே பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சிப்கோ தொழிற்சாலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அங்குள்ள வெடிக்காரன் வலசு கிராமத்தில் 74 ஏக்கர் பரப்பிலான அரளிக் குத்து குளத்தில், சிப்கோ தொழிற்சாலை அமைவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்சாலை அமைந்தால், இங்குள்ள 35 கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வனத்துறை மூலம் குளத்தில் உள்ள மரங்களைக் கணக்கெடுத்து மரங்களில் நம்பர் போடும் பணி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூலாம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Next Story