`பூசாரி மரண வழக்கு' - OPS தம்பி கோர்ட்டில் ஆஜர் | O.Raja
தேனி மாவட்டம், கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்த நாகமுத்து என்பவர், கடந்த 2012-ஆம் ஆண்டு த*கொல செய்து கொண்டார். அவரை த*கொ*லக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலரும், ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே பாண்டி இறந்து விட்டதால், மீதமுள்ள 6 பேர் மீதான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேர், சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் ஆஜராகினர். வழக்கில் இறுதிக் கட்ட வாதங்கள் முடிவடைந்தது அடுத்து, தீர்ப்புக்காக அக்டோபர் 14-ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
Next Story