தமிழகத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனை..பின்னணியில் முக்கிய புள்ளி?

x

தமிழகத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனை..பின்னணியில் முக்கிய புள்ளி?

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களை குறிவைத்து லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தெருவிலும் வீடு வாடகைக்கு எடுத்து, லாட்டரி விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இதன் பின்னணியில் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரும், வத்தலண்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது. வெளிமாநில லாட்டரி சீட்டுகளை 50 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதில் சில போலி லாட்டரி சீட்டு விற்பனையும், லட்சக்கணக்கான ரூபாயில் மோசடி நடப்பதாகவும் கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்