பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடிய அரசு பஸ்... அலறிய பயணிகள்...கடைசியில் காத்திருந்த ஷாக்
பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடிய அரசு பஸ்... அலறிய பயணிகள்...கடைசியில் காத்திருந்த ஷாக்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அரசுப்பேருந்து திடீரென பிரேக் பிடிக்காமல் மருந்துக்கடை வாசலில் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நத்தம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை நடைமேடையில் நிறுத்த ஓட்டுனர் அசோக் முயற்சித்துள்ளார்... ஆனால் பிரேக் பிடிக்காததால் பேருந்தின் வேகத்தை அசோக் குறைக்க முயற்சித்த நிலையில், அதற்குள் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கட்டு ஓடிய பேருந்து, பேருந்து நிலைய வளாகத்தின் எதிரில் உள்ள மருந்து விற்பனை கடை வாசலில் மோதி நின்றது... மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அதிகாலை வேளை என்பதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது... இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சுக்கு நூறாகின. நத்தம் மற்றும் கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் பல பேருந்துகள் பழுதான நிலையிலேயே இயங்குவதால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.