"ஆய்வு செய்வதற்காக செல்லவில்லை" - ஆளுநர் தமிழிசை விளக்கம்
தூத ்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆறுதலுக்காக சென்றதை கொச்சைப்படுத்த வேண்டாமென, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் விக்ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா நிகழ்ச்சி, புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை சவுந்தர ராஜன், தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தான் செல்லவில்லை என்றும், தனக்கு வாக்களித்த மக்களின் ஆறுதலுக்காக சென்றதாகவும் தெரிவித்துள்ளார்
Next Story