பாத்ரூமில் குளிக்கும்போது நுழையும் நபர்.. 20 நாளாக அலறும் பெண்கள்..நைட்டானாலே ஒருவனால் பீதியில் ஊர்

x

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இரவு நேரங்களில் மதுபோதையில் கதவை தட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பாப்பிரெட்டிப்பட்டி அருகே பறையப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரின் மூத்த மகன் அருணகிரி என்பவர், மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் சண்டையிடுவதுடன், இரவு நேரங்களில் தூங்கவிடாமல் வீட்டின் கதவுகளை தட்டியும், கல்லெறிந்தும் அராஜகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்தபோது, மனநலம் பாதித்ததுபோல் நடித்து ஏமாற்றி, மீண்டும் ஊருக்கு வந்து அருணகிரி அராஜகம் செய்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இரவில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து கேஸ் சிலிண்டரை திருடி அப்பணத்தில் அருணகிரி மது அருந்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அருணகிரியை பிடித்து கட்டி வைத்து போலீஸ் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் மருத்துவ உதவியாளர்கள், அருணகிரியை சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்