போராட்டம் நடத்திய பொதுமக்களை அடிக்க பாய்ந்த குடோன் உரிமையாளர்.. பரபரப்பு காட்சிகள் | Dharmapuri

x

தருமபுரி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை வெடிமருந்து குடோன் உரிமையாளர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கெட்டுஅள்ளி பகுதியில் செயல்படும் தனியார் வெடிமருந்து குடோனுக்கு அடிக்கடி வாகனங்கள் வந்து செல்வதால், சாலை சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள், 7 வாகனங்களை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பென்னாகரம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த குடோன் உரிமையாளர், பொதுமக்களை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்