கணவர்கள் மீது மனைவிகளுக்கு விசித்திர அன்பை வரவைத்த ரூ.300.. ரகசியம் கேட்டு ஆடிப்போன கலெக்டர் ஆபீஸ்

x

7 கிராம கணவர்கள் மீது மனைவிகளுக்கு

விசித்திர அன்பை வரவைத்த ரூ.300 ரகசியம்

சொன்ன வார்த்தையில் ஆடிப்போன கலெக்டர் ஆபீஸ்

300 ரூபாய்க்கு ஆசைப்பட்டு டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என போராடிய மக்கள், விஷயம் பொதுவெளிக்கு வந்ததும், தெரியாமா பண்ணிட்டோம் சார் என கதறி இருக்கின்றனர். என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

மதுவிலக்கு கோரி போராடிய இந்த மண்ணில், மதுபானக் கடை வேண்டும் என மனு கொடுத்து திகைக்க செய்தனர் தருமபுரி மாவட்டம் அஞ்சே அள்ளி ஊராட்சிக்குட்பட்ட மக்கள்...

ஆம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம் கூட்டமாக திரண்ட மக்கள், விநோத கோரிக்கையை முன் வைத்தனர்..

அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அரங்காபுரத்தில் அரசு மதுபான கடை இல்லை என்பதால், அங்கு உடனடியாக மதுபானக் கடை அமைக்க வேண்டும் என கோரினர்..

அதிலும், லப்பரம்பட்டி, கெட்டூர், பளிஞ்சரஅள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் பலர் கூட்டமாக புறப்பட்டு வந்துள்ளனர்.

இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே என அதிகாரிகள் விழி பிதுங்க, ஏன் டாஸ்மாக் வேண்டும் என்ற கேள்விக்கு சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு அடுக்கடுக்கான காரணங்களையும் பட்டியலிட்டனர்...

நெடுந்தூரம் சென்று குடிக்கிறார் என கணவன்களுக்கு இரக்கப்பட்டு மனைவிகளும், நிறைய விபத்துகள் நடக்கிறது என குடிமகன்களும் சங்கடப்பட்டு மதுபானக் கடை அமைக்க கோரியது தான் வேடிக்கையின் உச்சக்கட்டம்.

இந்த காணொளி செய்தியாக பரவி தமிழகம் முழுவதும் தெரிய வர, கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. மதுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பலர் போராடி வரும் சூழலில், மதுவுக்கு ஆதரவாக இத்தனை பேர் குரல் கொடுப்பதா என பலர் கொதித்தெழுந்து வந்தனர்...

ஆனால், ஊருக்குள் இவ்விவகாரம் களேபரத்தை கிளப்ப, நிலைமை தலைகீழாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாஸ்மாக் வேண்டும் என மனு கொடுக்க வந்தவர்கள், 300 ரூபாய்க்கு ஆசைப்பட்டு தெரியாம பண்ணிட்டோம் என புலம்பித் தள்ளி வருகின்றனர்.

தெரியாமல் பண்ணிட்டோம் எங்களுக்கு டாஸ்மாக் வேண்டவே வேண்டாம் என கும்பிடு போடாத குறையாக புலம்புகின்றனர்..

இது குறித்து ஊருக்குள் விசாரித்த போது தான், வில்லங்கமான விவகாரமும் தெரியவந்துள்ளது. அதாவது தங்கள் ஊரில் டாஸ்மாக் கடை அமைக்க ஒரு நபர் இடம் வழங்கியுள்ளதாகவும், அதனை எதிர்த்து மக்கள் போராடி வரும் சூழலில் வில்லத்தனமான எண்ணம் கொண்டு ஒன்றுமறியாத முதியவர்களை அழைத்து சென்று இப்படி மனு கொடுக்கும் செயலில் ஈடுபட்டதாக கூறுகின்றனர் ஊர்மக்கள்...

என்ன நடந்தாலும் எங்களுக்கு டாஸ்மாக் வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர் ஊர் மக்கள்...

இனி எங்கள் ஊரில் டாஸ்மாக் என்ற பேச்சுக்கே இடமில்லை என உறுதியாக இருக்கும் ஊர்மக்கள், நடந்ததெல்லாம் தப்புதான்... இனி இப்படி பண்ண மாட்டோம் என கூறியிருக்கின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்