ரூ.4.80 கோடி மோசடி.. முன்னாள் ராணுவ வீரர் மீது புகார்.. "பணமே இல்லனு சொல்றாரு"

x

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தீபாவளி சீட்டு நடத்தி முன்னாள் ராணுவ வீரர் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. பையர்நாயக்கியம்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ் - புஷ்பா தம்பதி இரட்டிப்பு வட்டி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தீபாவளி சீட்டு வசூலித்துள்ளனர். இதனை நம்பி பலர் 50 லட்சம் ரூபாய் வரை சீட்டு கட்டிய நிலையில், இதுவரை வட்டிப்பணம் கூட தரவில்லை எனக்கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்