காதலியை பெண் கேட்க சென்றதால் பறிபோன இளைஞர் உயிர் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் புதிதாக தொடங்கப்பட்ட பிரியாணி ஓட்டலில் முகமது ஆசிப் என்ற இளைஞர் வேலைபார்த்து வந்தார். இவர் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண்ணின் வீட்டுக்கு பெற்றோருடன் சென்று பெண் கோட்டுள்ளனர். பெண் கொடுக்க மறுத்த அவர்கள், முகமது ஆசிப்பை திட்டி எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக பெண்ணின் சகோதரர்களுக்கும் முகமது ஆசிப்புக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த ஆசிப்பை, பெண்ணின் சகோதரர்கள் ஜனா பிரியன், அம்ச பிரியன் உள்பட 3 பேர் சேர்ந்து சரமாரியாக கத்தியால் குத்தியும், கம்பியால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளநிலையில், கொலையில் தொடர்புடைய ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்