தந்தையை பார்க்க ஆசையாய் சென்ற மகன்..முகம் சிதைத்து கொலை... யாருக்கும் நடக்க கூடாத கொடூரம்

x

அரசு பள்ளி அருகே, 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் திப்பட்டியைச் சேர்ந்த தம்பதி பெருமாள்-குமுதா. பெருமாள் லாரி ஒட்டுநராக வேலை பார்த்துவரும் நிலையில், இவர்களுக்கு இரு மகன்கள் இருந்தனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், குமுதா தசாம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இதனிடையே தாயுடன் இருந்த மூத்த மகன் யாதவன், தனது தந்தையை காண சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தசாம்பட்டியில் உள்ள அரசு பள்ளி அருகே யாதவன் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், மாணவனின் இந்த கொடூர மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்